கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
அரசாங்கம் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் வாக்கை பெற்ற வித்தியாசமான முறை மிகவும் சந்தேகத்திற்குரியது என்பதால், அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்குகளை பெற்ற விதம் மிகவும் வித்தியாசமானது. இதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஏன் எதிராக வாக்களித்தனர். அந்த கட்சியின் மூன்று பேர் ஏன் ஆதரித்து வாக்களித்தனர் என்பதை கண்டறிய வேண்டும்.
இதில் உள்ள இரகசியம் என்ன என்பதை தேட வேண்டும். முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் எனக் கூறியவர் 20வது திருத்தச் சட்டத்தை பெற முஸ்லிம் பிரதிநிதிகளின் வாக்குகளை பெறுவதில் சம்பந்தப்பட்டுள்ளார்.
அப்படியானால் எப்படி மாற்றம் ஏற்படும். இதனால் இதில் ஒரு உடன்பாடு இருக்கின்றது என எமக்கு நியாயமான சந்தேகம் காணப்படுகிறது எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
