100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர் பலத்த காயம்
நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்குச் சென்ற கார் ஒன்று நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியிலிருந்து வீதியை விட்டு விலகிக் குறித்த கார் சுமார் 100 பள்ளத்தில் உள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதிக்குப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.








தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
