யாழில் கனரக வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸாருக்கு இடையூறான கார்!
கிளிநொச்சியில் (Kilinochchi) இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த கனரக வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் ஒன்று இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தர்மபுரம் - கல்லாறு பகுதியில் இருந்து நேற்றிரவு சட்ட விரோதமாக மணலை ஏற்றி வந்த கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் துரத்திச் சென்றனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது பொலிஸாரது வாகனத்துக்கும், மணல் ஏற்றி வந்த கனரகவாகனத்துக்கு இடையே குறுக்கு மறுக்காக வீதியில் பயணித்த கார் ஒன்று கனரக வாகனத்தை தப்பிக்க வைக்க முயற்சித்துள்ளது.
இதனையடுத்து, அந்த கனரக வாகனம் வீதியில் மணலை கொட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்தநிலையில், குறித்த காருக்கும் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துக்குமிடையே தொடர்பு காணப்படும் என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
