கைதானவர்களை விடுவிக்க கோரி இந்திய கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்
இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் கடற்றொழிலாளர்கள் இன்று (19.03.2025) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, துறைமுகத்தில் 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்ப்பட்டுள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலிற்கு செல்லும் கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது.
கடற்றொழிலாளர்களுக்கு பல இலட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து, தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 3 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.
இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைகண்டித்து, இன்று ஒரு நாள் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
