இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்!
ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 613,728 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 98,420 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
அதன்படி, ரஷ்யாவிலிருந்து 80,953 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 58,124 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 43,265 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 34,659 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
அத்தோடு, பிரான்ஸிலிருந்து 37,119 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 22,770 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
