மூதூரில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (19) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
திருமண வீடொன்றுக்கு அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு குறித்த காரில் இருவர் பயணித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் தூக்கம் விபத்துக்கான காரணமென தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








