சிறைச்சாலை பேருந்திலிருந்து தப்பிச்சென்ற இரு கைதிகள் மடக்கிப்பிடிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள், பொல்கஹவல மெத்தலந்த பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பிச் சென்று மலசலகூடமொன்றில் மறைந்திருந்த நிலையில் பொல்கஹவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகளை அழைத்துக்கொண்டு மூன்று பஸ்கள் சென்றுள்ள நிலையில், கொழும்பு - குருநாகல் பிரதான வீதி, பொல்கஹவெல மெத்தலந்த பிரசேத்தில் வைத்து ஒரு பஸ்ஸில் இருந்த கைதிகள், பஸ்ஸுக்குள் கழகம் விளைவித்துள்ளனர்.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் பஸ்ஸைத் திறந்து பார்க்க முற்பட்டபோதே, கைதிகள் பஸ்ஸிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த இருவரும் கொஸ்கலே பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையின் மலசலகூடத்தில் மறைந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையைடுத்து கைதிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
