மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டதாக மக்களை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலையின் அசமந்த போக்கே இதற்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று(18) காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக திருகோணமலை. அம்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து நோய்க்கான சிகிச்சையை பெறுவதற்காக அதிகமான நோயாளர்கள் வருவது வழமை.
புற்று நோய்க்கான சிகிச்சை
இந்த நிலையில் குறித்த கதிர்வீச்சு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதாகவும் இதனை திருத்தும் நபர் இங்கு இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் அல்லது கொழும்பில் இருந்து வரவேண்டியுள்ளதால் குறித்த தினத்தில் சிகிச்சையை பெறமுடியாமல் நிலை காணப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பிரயாணித்து வைத்தியசாலையை காலையில் சென்று அங்கு இரவு வரை காத்திருந்து சிகிச்சை பெறமுடியாமல் ஏமாறிச் செல்ல வேண்டியதுடன், உரிய காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாதலால் நோய் அதிகரித்து உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால் அதனை திருத்தும் ஒருவரை இங்கு நியமித்திருக்க வேண்டும் எனவும், அதைவிடுத்து இயந்திரம் திருத்துபவர் இரண்டு அல்லது மூன்று தினங்களின் பின்னர் வரும்வரை நோயாளர்கள் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் கவனம் கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுதருமாறு நோயாளர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri