புற்றுநோயாளர்கள் தொடர்பில் பதிவான அதிர்ச்சி தகவல்கள்
நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 அல்லது 5 புதிய புற்று நோயாளிகள் இனங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சேனக தலகல தெரிவித்தார்.
மஹரகமவில் அமைந்துள்ள அபேக்சா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு வெளிநோயாளர் பிரிவில் 3500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புற்றுநோய் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு
அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் அசரெலி பெர்னாண்டோ: கடந்த இரு தசாப்தங்களில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
சராசரியாக ஒரு வருடத்தில் முற்பத்து ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் (37000) சேர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 100 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

மேலும் ஒரு நாளைக்கு 40 பேர் புற்றுநோயாளர் மரணிக்கின்றனர். ஆண்,பெண் இரு பாலாரும் அதிகமாக பாதிக்கப்படும் புற்றுநோய்களாக நுரையீரல் புற்றுநோய்: சுவாசப் பாதையில் ஏற்படும் கட்டி, இது சிறிய மற்றும் சிறியதல்லாத செல் புற்றுநோயாக வகைப்படுத்தப்படுகிறது.
பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer) பெருங்குடல் அல்லது மலக்குடலை பாதிக்கும் புற்றுநோயாகும். இதற்கு காரணம் மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களில் இருந்து விடுப்பட்டு சீனி,உப்பு,எண்ணெய் அதிகமான நவீன உணவு பழக்கங்களால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.