வெளிநாட்டில் உள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்து: வெளியானது சுகாதார அமைச்சின் தீர்மானம்
வெளிநாட்டில் உள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
சுகாதார அமைச்சு இதுவரையில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சிறி சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் குழுவால் இறுதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் விடுமுறையை ரத்து செய்ய அமைச்சகம் மட்டும் முடிவை எடுக்க முடியாது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் குழுவால் அது இறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் பெருமளவில் வெளியேறியதை அடுத்து, சுகாதார அமைப்பில் ஆலோசகர்களின் வெற்றிடங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்தே வெளிநாடு சென்றுள்ள மருத்துவ ஆலோசகர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.” என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |