ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா நிதியுதவி
உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் இடம்பெற்ற ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து பில் பிளேர்(Bill Blair) ஒரு அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''ஜெர்மனியின் முயற்சியில் கனடா இணையும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இது உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாகவழங்க சர்வதேச சமூகத்திடம் இருந்து பணம் மற்றும் வளங்களை திரட்டுகிறது.
ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் கொன்றது மற்றும் மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அழித்த ரஷ்ய வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான உதவியாகும்" என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீண்ட கால பயிற்சி
கனேடிய ஆயுதப்படை வீரர்கள் இப்போது ஜெர்மனியில் பாதுகாப்பு உதவிக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், இது உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு உதவுகிறது என்றும் ஆயுதப்படைகளுக்கு உடனடி மற்றும் நீண்ட கால பயிற்சி தேவைகளை திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 17 அன்று, ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்க கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்டறியும் முயற்சியைத் ஆரம்பித்தது.
டென்மார்க் மற்றும் நெதர்லாந்துடன் நிதி முயற்சிகளை ஆராய்வதாக ஜேர்மனி முன்னர் அறிவித்திருந்தது. மேலும், ஜெர்மனியின் முயற்சிக்கு 200 மில்லியன் யூரோக்கள் பங்களிப்பதாக ஏப்ரல் மாதம் பெல்ஜியம் கூறியாமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |