கனடா விசா நடைமுறைகளில் மாற்றம்!
கனடாவிலே வெளிநாட்டு விசாவை வழங்குகின்ற நடைமுறைகளிலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இறுக்கம் காரணமாக ஆவணங்களை சமர்ப்பிக்கின்ற தன்மை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கனேடிய தொழில்வாய்ப்பு சமூக அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2024 ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டிலிருந்து கனடாவிற்கு சென்று வேலை செய்கின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற தற்காலிக விசா நடைமுறையிலும் இறுக்கம் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,கனேடியர்களின் வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




