அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புக் கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்
காசா பகுதியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் போர் நிறுத்த முன்மொழிவின் அடிப்படையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை எட்டியதன் பின்னணியில் குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்ததும், "மக்கள் ஒப்புக்கொண்டு காசாவை மீண்டும் கட்டியெழுப்புவார்கள்" என்று கூறியிருந்தார்.
வேறுபட்ட உலகம்
இது ஒரு "வேறுபட்ட உலகம்" என்றும், "காசாவிற்கு கணிசமான அளவு பணம் செலவிடப்படும்" என்றும் அமெரிக்கத் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு, காசா பகுதி, பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அது மீண்டும் கட்டப்படும் இடமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் அதை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். ஏனென்றால் அவர்களிடம் மிகப்பெரிய செல்வம் உள்ளது, மேலும் அது நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
"மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
காசா போர் நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறுகிறார்.
இந்நிலையில் காசா போரில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்கான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஹமாஸும் இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதி திட்டம்
"இஸ்ரேலும் ஹமாஸும் எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அமெரிக்க ஜனாதிபதி நேற்று சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.
இதன்படி "காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் அனைத்து விதிகள் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்து ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் வழி வகுக்கும்.
இது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்," என்று கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, கூறியுள்ளார்.
எகிப்தின் ஜனாதிபதி
இந்நிலையில் "உலகம் ஒரு வரலாற்று தருணத்தைக் காண்கிறது" என்று எகிப்தின் ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் போரின் அத்தியாயத்தை மூடுவது மட்டுமல்லாமல், நீதி மற்றும் ஸ்திரத்தன்மையால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்திற்கான பிராந்திய மக்களுக்கு நம்பிக்கையின் கதவையும் திறக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
எகிப்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக போர்நிறுத்தத்தை "நேர்மறையான முன்னேற்றம்" என்றும் போரில் ஒரு "திருப்புமுனை" என்றும் விவரித்திருந்தது.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு (WHO) காசாவில் "மோசமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் பணிகளை அதிகரிக்கத் தயாராக உள்ளது" என்று அதன் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்த செய்திக்கு எதிர்வினையாற்றும் X இல் ஒரு பதிவில், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், WHO இப்பகுதியில் "அழிக்கப்பட்ட சுகாதார அமைப்பை மறுசீரமைக்க ஆதரவளிக்கும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறந்த மருந்து அமைதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒப்பந்தத்தை மதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இதனால் அனைத்து பொதுமக்களின் துன்பங்களும் இறுதியாக முடிவுக்கு வந்து, அனைத்து பணயக்கைதிகளும் மரியாதையுடன் வீட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




