அமெரிக்கத் தூதுவரை வெளியேற்றக் கோரி கனடாவில் 70,000 பேர் கையெழுத்து
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் '51-வது மாநிலமாக' இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த மனு விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri