நாட்டு மக்களுக்கு பரிசுப்பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பிரதான வங்கி ஒன்றினால் விசேட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் பரவி வருகின்றது.
நாளை மறுதினம் வரவுள்ள பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பரவும் போலியான குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என CERT நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரிசுப்பொருட்கள்
குறித்த வங்கியானது அத்தகைய பரிசுகள் எதனையும் வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என CERT நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்கள் மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களைத் திருடும் நோக்கத்துடன் மோசடியாளர்களினால் மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிக் கணக்குகளும் மோசடி நபர்களின் கைகளுக்குச் செல்லக்கூடும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த குறுஞ்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்துவதைத் தவிர்க்குமாறு CERT நிறுவனம் மக்களை கேட்டுள்ளது.