மகிந்த, கோட்டாபயவுக்கு தடை - மன வேதனையில் சப்ரி (Video)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் விதித்த தடைக்கு வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிராக கனேடிய அரசு நேற்று தடை விதித்துள்ளது.
இந்த நான்கு பேரின் சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அவற்றை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் டானியல் பூட்டை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒருதலைப்பட்சமான தடைகளை கனடா அரசாங்கம் அறிவித்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதுடன், அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan