கனடா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
கனடாவில்(Canada) ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி(Mark carney) தெரிவித்துள்ளார்.
நேற்று(23) அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
கனடா நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வரை உள்ளது.
கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வருகின்றார்.
மார்க் கார்னி
ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி கருத்து தெரிவிக்கையில்,
"கனடாவில் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார்.
அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது. ட்ரம்ப்(Donald Trump) நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது.
இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
