நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்ற பெண்
நமீபியாவில்(Namibia) முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ நந்தி தைத்வா என்ற பெண் பெற்றுள்ளார்.
ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
பதவியேற்பு விழா
இதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா(72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றனர்.
இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.
முதல் பெண் ஜனாதிபதி
இதன்போது முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி மற்றும் ஆபிரிக்காவின் 2ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ(Netumbo Nandi-Ndaitwah ) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |