சுஷாந்த் சிங் வழக்கில் இறுதி அறிக்கை சமர்ப்பித்த இந்திய சி.பி.ஐ
இந்திய திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் இந்திய சி.பி.ஐ(Central Bureau of Investigation-CBI - india) தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணம் தொடர்பான ஐந்து ஆண்டு கால விசாரணையின் முடிவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தவறான முடிவுக்கு ஊக்குவிக்கும் வகையிலான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல்
குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது பெற்றோர், சகோதரர், சுஷாந்தின் சகோதரி பிரியங்கா மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனுடன், திரைப்பட நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சுஷாந்தின் தந்தை பீகார் மாநிலத்தின் பாட்னா பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது,
இது தவறான முடிவா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்னர், சிபிஐ இறுதியாக மேற்கண்ட முடிவு முன்வைத்துள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam