கனடாவில் அதிக சம்பளம் தரும் வேலைகள்!
கனடாவில் அதிக ஊதியம் தரும் வேலைகளை கனடாவின் புள்ளிவிவரங்கள் நிறுவனம்(statistics canada) தெரிவித்துள்ளது.
இந்த வேலைகள் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூர வடக்கு பிரதேசங்களில் கூட கிடைக்கின்றன.
57,000 டொலர்கள் முதல் 131,000 டொலர்கள் வரை இந்த வேலைகளுக்கு ஆண்டு சம்பளம் வழங்கப்படுகின்றது.
கள செயற்பாட்டு மேலாளர்கள்(Field Operation Managers), நிர்வாக ஊழியர்கள்(Administrative staff), கள மேற்பார்வையாளர்கள்(Field Supervisors) மற்றும் ஆட்சேர்ப்பு எழுத்தர்கள்(Recruitment Clerks) ஆகிய வேலைகளுக்கு இந்த சம்பள எல்லை வழங்கப்படுகின்றது.
அனுபவம்
நுனாவுட்டில், கள செயற்பாட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஆட்சேர்ப்பு எழுத்தர் போன்ற சிறப்பு பணிகள் கிடைக்கின்றன.
இதற்கு, கிட்டத்தட்ட 80,000 டொலர்கள் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படுகின்றது. ஒன்ராறியோவில் நிர்வாகப் பதவிகளுக்கு 57,217 – 61,761 டொலர்கள் ஆண்டு சம்பளமும் வழங்கப்படுகின்றது.
இந்த வேலைகளுக்கு தலைமைத்துவம் அல்லது அலுவலக ஆதரவு அனுபவம் மற்றும் மாலை அல்லது வார இறுதிகளில் வேலை செய்யும் திறன் தேவை.
ஆர்வமுள்ளவர்கள் GC வேலைகள் வலைத்தளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என கனடாவின் புள்ளிவிவரங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



