கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு புதிய தேர்வு
கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 'TOEFL Essentials' என்ற புதிய ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
'IELTS' அல்லது 'CELPIP' தவிர விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு' தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா(IRCC) இந்தத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 1.5 மணிநேரம் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வு மிகவும் குறுகியதாக கருதப்படுகின்றது.
பயனுள்ள தேர்வு
மக்கள் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைச் சரிபார்க்க இந்தத் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தேர்வில், கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன.
பணியிடப் பேச்சுக்கள் அல்லது அன்றாட உரையாடல்கள் போன்ற நிஜ வாழ்க்கை தகவல் தொடர்புகளில் கவனம் செலுத்தும் தேர்வாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது கனடாவில் வாழவும் வேலை செய்யவும் தயாராகும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு பயனுள்ள தேர்வாக அமைகின்றது.
மதிப்பெண்கள்
இந்தத் தேர்வு குறைந்த விலையில் உலகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், தேர்வை எழுதி 6 நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ மதிப்பெண்கள் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண்களை பல்வேறு நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் அனுப்பலாம்.
ஒட்டுமொத்தமாக, இந்தப் புதிய தேர்வு, கனடாவுக்குச் செல்ல விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு குடியேற்றத்தை எளிதாக்குகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




