புதிய கல்வியாண்டில் ஒன்ராறியோ அரசு எடுத்துள்ள நடவடிக்கை
2025-26 புதிய கல்வியாண்டில் புதிய பள்ளிகள், விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறைகள், மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கென ஒன்ராறியோ அரசு முன்னெப்போதுமில்லாத அளவில் 30.3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்நிதியுதவியின் ஒரு பகுதியாக மாநிலமெங்கும் 41 புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட பாடசாலைகளை ஒன்ராறியோ முன்னேற்றுவதுடன் அவற்றில் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நவீன கற்றல் வசதிகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இதுபற்றி அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், " இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு, எமது மாணவர்களுக்கு பாதுகாப்பான, நவீன மயப்படுத்தப்பட்ட வகுப்பறைகளையும், மாணவர்கள் முன்னேற்றத்துக்கு வேண்டிய உபகரணங்கள் அவர்களுக்குக் கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
30.3 மில்லியன் நிதி
அத்துடன், மேலும் அரசாங்கத்தின் அடிப்படை தொடர்பான அணுகுமுறை இளையோர்களை அவர்களின் தொழில்சார் மற்றும் வாழ்கையில் வெற்றி பெறுவதற்குத் தயார்படுத்தும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிதியுதவி மாணவர்களின் பாதுகாப்புக்கும், பள்ளிகளில் நவீன கற்றலுக்கான வளங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வழியமைத்துக் கொடுப்பதனூடாக ஸ்காபரோ வாழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கும்.
இந்நிதியின் மூலம், ஒன்ராறியோ முழுவதும் உள்ள மாணவர்கள் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும், அதிக வசதி வாய்ப்புகளையும் வரும் கல்வியாண்டுக்கான வலுவான அடித்தளத்தையும் பெற்றுப் பயனடைவர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



