இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் கவலை வெளியிட்டுள்ள கனடா
இலங்கையில் மனித உரிமை நிலமை மிகவும் மோசமடைந்து வருவது குறித்து தாம் பெரும் கவலை கொள்வதாக கனடா அறிவித்துள்ளது
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இன்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam