கறுப்பு ஜூலை! மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது - காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்
"1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலிசுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்" என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(23.07.2026) கல்முனையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மறக்கவும் மன்னிக்கவும் முடியாத துயர நாள்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும்.
43 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது. அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் குறைந்தது 3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டள்ளனர்.

குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும், சொத்துக்களும் முற்றிலும் சூரையாடப்பட்டுள்ளன.
அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தமிழர் அழிப்பு
இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக அழிக்கும் முனைப்புடன் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தர்மதாச (தொண்டமான்), தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன் ,ஈபிஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்) உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam