மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் இன்று (17) துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிரசார நடவடிக்கை
இதன்போது களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பேருந்து நிலையம், பொதுச்சந்தைத் தொகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் இத்துண்டுபிரசுர பிரசாரப்பணி இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா. நகுலேஸ் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
