நீதி தேவதைக்கே சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!
நீதி தேவதைக்கு சிறைத்தண்டனை
நீதி தேவதை (லேடி லிபர்ட்டி) போல உடையணிந்து விசாரணைக்கு சென்ற கம்போடிய-அமெரிக்க பெண் ஆர்வலருக்கு தேசத்துரோக குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்டு பாரிஸில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை நாட்டுக்கு வர அனுமதிக்கவேண்டும் என்று கோரி வருபவர்களில் ஒருவரான தியரி செங் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது மனசாட்சி, சுதந்திரம் மற்றும் நீதியின் மீதான தமது நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக, தாம் சிறையின் செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நீதி தேவதையான சட்டத்தரணி
இன்று அவர், நீதிமன்றத்திற்கு வெளியே பச்சை நிற சட்டை அணிந்து, போலியான டோர்ச் லைட்டை பிடித்துக் கொண்டு, "சுதந்திரம்" என்று எழுதப்பட்ட கிரீடத்தை அணிந்திருந்தவாறு நீதிமன்றத்துக்குள் செல்ல தயாரானபோதே கைதுசெய்யப்பட்டார்.
சட்டத்தரணியான இவர், கடந்த காலங்களில் தனது நீதிமன்ற அமர்வுகளுக்கு உரிய ஆடைகளையே அணிந்து வந்தார் என்று அறியப்படுகிறது.
கம்போடிய பிரதம மந்திரி ஹுன் சென் 1985 ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறார்
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருப்பவர்களில் அவரும் ஒருவராவார். அதேநேரம் அவர் மோசமான மனித உரிமைகள் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கிறார்.