தென்னிலங்கையில் தாயின் பாதக செயல்
தென்னிலங்கையில் தனது இரண்டரை மாதக் குழந்தையைக் கிணற்றில் வீசிய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, எல்பிட்டிய பகுதியில் நேற்று குறித்த தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தாய், தனது பெண் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு கூச்சலிட்டுள்ளார்.
குழந்தையின் உயிர்
அதற்கமைய, உடனடியாக செயல்பட்ட அவரது கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மகளை வெளியே இழுத்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால், குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளார்.
குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழம் குறைவாக இருந்ததால், குழந்தையைக் காப்பாற்ற முடிந்ததுடன், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri