மேதகு திரைப்படத்திற்கு தடை விதித்த கம்போடியா
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையின் ஆரம்பகாலம் மற்றும் சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைப்படத்தை கம்போடியாவில் திரையிட அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், கம்போடியா வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்போடிய தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை மகிமைப்படுத்தும் வகையில் கதை உருவாக்கத்தை கொண்ட மேதகு திரைப்படத்தை தொலைக்காட்சிகள், கேபிள் வலையமைப்பு ஆகியவற்றிலும் ஒளிப்பரப்ப தடைவிதித்துள்ளதாக கம்போடிய செய்தித்துறை அமைச்சின் நிரந்தர ராஜாங்க செயலாளர் ஊடாக தொலைக்காட்சிகளின் பிரதானிகளுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியவாதியும் ஈழ ஆதரவாளருமான கிட்டு இயக்கியுள்ள இந்த திரைப்படம் அண்மையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது.
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri