படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரின் நினைவு தினத்திற்கு அழைப்பு
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00மணிக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.
அதனை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,பொது
அமைப்புகளின் பிரமுகர்கள்,மதத்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
