பிரித்தானிய அரசாங்கத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் - பதவி விலகுமாறு பிரதமருக்கு கடும் அழுத்தம்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவி அதிகரிக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், அமைச்சரவை அமைச்சர்கள் குழு அவரை பதவி விலகுமாறு கூறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கொறடா கிறிஸ் ஹீடன்-ஹாரிஸ் மற்றும் போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரதமருக்கு எதிராக இருப்பதாகவும், பிரதமரை பதவி விலகிச் செல்லுமாறு அழைப்பு விடுக்க காத்திருப்பவர்களில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை முதல் 38 பேர் பதவி விலகியதை தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் தலைவராக நீடித்தால் தனது அரசாங்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பதவி விலகிச் செல்வது பொறுப்பாக இருக்காது
எவ்வாறாயினும், இந்த தருணத்தில் பதவி விலகிச் செல்வது பொறுப்பாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்ஸ் இணைப்புக் குழுவில் பேசிய அவர், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் உக்ரைன் போருக்கு மத்தியில் தான் பதவி விலகிச் செல்வது சரியல்ல என போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உடனடியாக பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை நிராகரித்த அவர், 2024ம் ஆண்டிலேயே தேர்தல் இடம்பெற கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜோன்சனை பதவி விலகச் சொல்ல தயாராக இருக்கும் குழுவில் வெல்ஷ் செயலர் சைமன் ஹார்ட்டும் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லெவலிங் அப் செயலர் மைக்கேல் கோவ் அவரை முன்னதாகவே செல்லுமாறு கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற போரிஸ் ஜோன்சன்
மேலும் வணிகச் செயலர் குவாசி குவார்தெங், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தலைமைக் கொறடாவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக கடந்த மாதம் நம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் வெற்றிபெற்றிருந்தார். இதனால் தற்போதுள்ள விதிகளின்படி அவர் ஒரு வருடத்திற்கு மற்றொரு சவாலில் இருந்து விடுபடுவார்.
நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ஆகியோர் சுமார் 10 நிமிட இடைவெளியில் பதவி விலகியதை தொடர்ந்து, போரிஸ் ஜோன்சனின் பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிறிஸ் பிஞ்சரை துணைத் தலைமைக் கொறடாவாக நியமிப்பதற்கான ஜோன்சனின் முடிவின் மீதான சர்ச்சையைத் தொடர்ந்து அவர் தற்போது கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.