செம்மணி புதைகுழி விவகாரம் - நீதிகோரி யாழில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு
செம்மணி புதைகுழி விவாகரத்தில் இலங்கை தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவா (Raj Somadeva) சமர்ப்பித்த அறிக்கையை முற்று முழுதாக நிராகரிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று(07.11.2026) யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
ராஜ் சோமதேவா போன்றவர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் சார்பாகவே அமைக்கின்றது என்றும், செம்மணி மனித புதைகுழியை மேலும் அகழ்வுகளை மேற்கொண்டு உரிய மக்களுக்கு பதிலை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் செம்மணியில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கலந்துக் கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.