கறுப்புப் பட்டியல் வெளிநாட்டு நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியுள்ள அனுமதி
எதிர்வரும் 2022 ஜனவரி முதல் 8 மாதங்களுக்கு இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனம் (Singapore’s Vitol Asia Pte. Ltd), ஏற்கனவே இலங்கையில் பல தடவைகளாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனமாகும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல்பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தரமற்ற எாிபொருட்களை விநியோகித்தமை தொடர்பிலேயே இந்த நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
எனினும் அதனை மறந்து தற்போது அந்த நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த நிறுவனம் 2009ஆம் ஆண்டிலேயே கறுப்புப் பட்டியலில்
சேர்க்கப்பட்டதாகவும், பின்னர் அது விநியோக நிறுவனமாக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தொிவித்துள்ளார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri