மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய பிரதேசங்கள் மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காணிகளின் பயன்பாடு, கட்டிடங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல், வீடு வசதிகள் இன்மை, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண முற்படும் போது பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய திணைக்களங்கள்
அவ்வாறான சேவைகளை பொதுமக்கள் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளும் வகையில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் அரசாங்கத்தின் முக்கிய திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பொதுமக்கள் தங்கள் பிரதேசங்களில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
