மத்திய கிழக்கு போர்ச் சூழல்! இலங்கைக்கு நேரடியான பாதிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த தொடர் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு நேரடியான பல பாதிப்புக்கள் உள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு நேரடியான பாதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் எந்த நாடுகளுக்கும் சார்பாக செயற்படவில்லை. அமைதிக்காகவே குரல் கொடுப்போம். இந்த மோதல் நிலைமை காரணமாக வலுசக்தி துறை, தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதித்துறை மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் என பல துறைகளிலும் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்படும்.
இவை அந்நிய செலாவணி வருமானத்திலும் தாக்கம் செலுத்தக் கூடும். இவை மாத்திரமின்றி தற்போது உலகலாவிய ரீதியில் எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.
இவ்வனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையிலேயே அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு மாற்றுவழியைத் தேட வேண்டியுள்ளது, ஏனைய துறைகளில் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 18 மணி நேரம் முன்

இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
