இலங்கையில் பெண்களின் பணி நேரம் தொடர்பில் அமைச்சரவையில் திருத்தம்
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வியாபாரத்தளம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில், இலங்கையில் பெண்கள் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை பணிபுரிய அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளின் பணி நேரங்களை கருத்திற்கொண்டு, அவுட்சோர்சிங் (நிறுவனத்தின் பணிகளை, நிறுவனத்துக்கு வெளியே இருந்து மேற்கொள்ளும் முறை) துறைகளில் உள்ள பல வணிக நிறுவனங்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் கொண்ட சட்ட விதிகள்
இந்த நிலையில் பெண்களை இரவில் பணியமர்த்த அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கொண்ட சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1954 ஆம் ஆண்டின் கடை மற்றும் அலுவலக ஊழியர்களின் சட்டத்தின் 19வது
இலக்கத்தை, திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர்
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு
அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.