கால்வாயில் சிக்கிய கெப் வாகனம்: இருவர் பலி
அவிசாவளை, கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்வத்த - மானகட வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் வாகனம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, கெப் வாகனமானது சுமார் 50 மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கெப் வாகனத்தில் சாரதி உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவர்கள் பலல்கொட்டுவ மற்றும் கிரிபத்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 69 வயதுடையவர்களாவர்.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
