யாழில் பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனம்
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பேருந்து தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனமானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும், குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று(13) காலை வாகனத்தை மீண்ட கோப்பாய் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

