சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலி கைது
சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலியை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம நீதிமன்றத்தில் ஒரு உத்தியோகத்தரின் பணிகளைத் தடுப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஹோமாகம நீதவான், பொலிஸாருக்கு முன்னதாகவே உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், திலினி பிரியமாலியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
திலினி பிரியமாலி இன்று காலை ஹோமாகம பொலிஸார் மத்தியில் நேரில் வந்தபோது, அவர்கள் உடனடியாக கைது செய்ததாக பொலிஸார் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஏற்கனவே திலினி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




