கொழும்பின் புற நகரப் பகுதியில் எரியூட்டப்பட்ட இளம் வர்த்தகரின் சடலம்
கொழும்பின் புற நகரப் பகுதியான தலங்கம, தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் மாத்தளை - ரத்தோட்டை பகுதியில் உள்ள காட்டில் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ராஜபக்ச முதியன்சலாகே சந்தன திலக் ராஜபக்ச என்ற 46 வயதான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் தலாஹேன பிரதேசத்தில் கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வர்த்தகரின் கார் அனுராதபுரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகருடன் நெருக்கமாக இருந்த நபர் காணாமல் போயுள்ளார். கைப்பற்றிய காரில் இருந்து சில ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொல்லப்பட்ட வர்த்தகரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை மாத்தளை வைத்தியசாலைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களிடம் இரத்த மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை அறிக்கை பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாத்தளை - ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan