பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் டீசலில் மண்ணெண்ணெய் துர்நாற்றம்! பேருந்து சங்கம் முறைப்பாடு!
பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை கொண்டிருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஊடகவியலாளர்களிடம் இரண்டு டீசல் மாதிரிகளை காண்பித்த அவர், ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் ஒன்றில் எவ்வித நாற்றமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்
எனவே நாட்டுக்கு எடுத்து வரப்படும் டீசலின் தரத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் டீசல் மாதிரிகள் விசாரணைக்காக பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்று கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri