நாமல் வெட்கி தலைகுனிய வேண்டும்! அம்பலமான பணிப்பகிஷ்கரிப்பு சதி
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கனை மொட்டு கட்சி அலுவலகத்திற்கு அழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிப் பெறவில்லை என அகில இலங்கை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அதன் செயலாளர் சேபால லினகே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ ஒன்றிணைந்த கால அட்டவணையை எதிர்த்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறும் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாமல் கூறியுள்ளார்.
தலைகுனிய வேண்டும்
அவருக்கு அரசுக்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பை கூட செய்ய முடியாமல் போயுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அவர் வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும். இன்று 450 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒன்றிணைந்த சேவைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதோடு இ.போ.ச சபை உழியர்கள் மோசடியில் ஈடுபடுவதற்காகவே இதற்கு எதிர்ப்பபு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
