ரணிலின் தற்போதைய நிலை குறித்து வைத்தியர் வெளியிட்ட தகவல்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியும், ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அதிக ஓய்வு தேவை எனவும் அவர் தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருப்பாரா? அல்லது வீடு திரும்புவாரா? என்பது அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முடிவைப் பொறுத்தது என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
உடல்நிலை
பொது நிதியை அபகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட போது அவரின் அனைத்து நோய்கள் தொடர்பிலான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவரது இதயத்தின் 04 பிரதான தமனிகளில் 03 தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
