தமிழர் பகுதியில் வழிமறிக்கப்பட்ட கொழும்பிலிருந்து சென்ற பேருந்து
முல்லைத்தீவில் இருந்து புதிதாக கொழும்பு நோக்கி புறப்பட்ட சொகுசு பேருந்தினை முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இளைஞர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மறித்து எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்து சேவையினை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கோரிக்கை முன்வைப்பு
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தினை தளமாக கொண்ட இலங்கையின் பிரபல்யமான தனியார் சொகுசு பேருந்து, ஏற்கனவே வழங்கப்பட்ட அரை சொகுசு பேருந்து வழித்தடத்தில் சொகுசு பேருந்தினை மாற்றி அமைத்துள்ளது.

சொகுசு பேருந்தின் முதற்பயணம் 12.11.2025 அன்று இடம்பெற்றவேளை முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இதற்கான எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் வடமாகாண முகாமையாளராக இருக்கும் ஒருவரே தனது சொகுசு பேருந்து சேவையினை முல்லைத்தீவில் இருந்து கொழும்பிற்கு ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே, முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேசிய போக்குவரத்துஆணைக்குழுவிடம் வழித்தட அனுமதி கோரிய போதும் இதுவரை வழங்காது ஒரு தனிநபர் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி எவ்வாறு தனது சொகுசு பேருந்து சேவையினை நடத்தமுடியும் இதற்குள் ஒரு பாரிய ஊழல் இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் ஊழல்கள் அற்ற அரசாங்கமாக அறிவித்து செயற்படுத்தி வரும் நிலையில் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தினை தொடங்கியுள்ள இந்த பேருந்து வழித்தட அனுமதியிலும் ஊழல் நிறைந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பேருந்து உரிமையாளர்கள் பலர் சொகுசு பேருந்து எடுப்பதற்கு தயாரான நிலையில் இருந்தும் அதற்கான வழித்தட அனுமதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படவில்லை என தெரிவித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இருந்தும் இந்த சொகுசு பேருந்துக்கான வழித்தட அனுமதியின் உண்மைத்தன்மை இல்லாத நிலை காணப்படுகின்றது. இதுகூட ஊழல் செயற்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஏனைய கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சொகுசு பேருந்து அனுமதியினை இந்த அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகள் ஆராய்ந்து வழங்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri