வெளிநாடொன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி
அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அத்துடன், 44 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அல்ஜீரியப் பிரதமர் சிஃபி கிரீப் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பூமெர்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
விசாரணை
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் தீவிரமாக வழங்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam