பிரபல பாதாள உலக புள்ளி பஸ் லலித் டுபாயில் கைது
‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயை தளமாகக்கொண்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை இவர் நடத்தி வந்த நிலையில், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ரவிந்து சங்க டி சில்வா எனப்படும் புரு மூனா என்பவரால் ஹங்வெல்ல - குறுக்கு வீதி பகுதியில் உள்ள கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைக்கு தலைமை தாங்கியவர் இவர் என்றும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
இவர் நீண்டகாலமாக உள்ளூர் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரராகவும் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹேவத் லலித் கன்னங்கர என்பவரின் நான்கு சகாக்கள் ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
