காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் இரகசிய நகர்வு
காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
குறித்த சந்திப்பில் உலகளாவிய முன்னணி நிதி நிறுவனங்களும் கலந்துகொண்டுள்ளதாக சல்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்திய செங்கடல் ரிசார்ட்டான ஷர்ம் எல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகின் முதன்மையான தலைவர்கள் பலர் கலந்துகொண்டு இஸ்ரேல் - ஹமாஸ் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இரகசிய ஒன்றிணைவு
இந்நிலையில், பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதன்மையான அதிகாரிகளை இரகசியமாக ஒன்றிணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் தொடங்கி, மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த மாநாட்டின் நோக்கமானது, பாலஸ்தீனத்தால் வழிநடத்தப்படும் போருக்குப் பிந்தைய காசாவிற்கான முக்கியமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை தொடங்குவதாகும்.
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இடிபாடுகளை அகற்றுதல், குடியிருப்புகளை கட்டி எழுப்புதல், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மீட்டெடுப்பது உள்ளிட்ட முதன்மையான இலக்குகளை விவாதிக்க உள்ளதாக துணை வெளிவிவகார அமைச்சர் ஹமிஷ் பால்கனர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னெடுக்கப்போகும் பணியின் அளவு, அது எவ்வளவு அவசரமானது, எவ்வளவு சிக்கலானது என்பதையும், எத்தனை ஆண்டுகளாகும், பல பில்லியன் தொகை செலவாகும் என்பதும் அறிந்துள்ளதாக அமைச்சர் பால்கனர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஜோர்டான், சவுதி அரேபியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் முதன்மையான அதிகாரிகளுடன் பாலஸ்தீன ஆணையமும் கலந்துகொண்டுள்ளது.





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
