ரணில் - சஜித் இணைந்த பயணம் தொடர்பில் நாளை முக்கிய முடிவு!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றின் இணைந்த பயணம் தொடர்பில் நாளை புதன்கிழமை சாதகமானதொரு முடிவு எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பொய்யுரைக்கும் அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், நாட்டுக்காக பொதுவானதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்வதற்கும் நாட்டு மக்கள் முன்வந்துள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
சாதகமான முடிவு
இந்தத் திட்டத்துக்கு அப்பால் சென்று எதையும் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய முடியும் எனக் கூறுவது பொய்யாகும். அவ்வாறு பொய்யுரைத்தால் மக்கள் அவர்களை வீதியில் தாக்கும் நிலை ஏற்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் பற்றி நாளை புதன்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் ஆராயப்பட்டு, சாதகமான முடிவு எடுக்கப்படும்.
ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த பயணத்தை விட சிறப்பான பயணத்தை இந்த அரசால் முன்னெடுக்க முடியுமா? முடியாது என்பதே எனது கருத்தாகும்.
நாம் கொண்டு வந்த சட்ட திட்டங்கள் மீறப்பட்டு வருகின்றன. அப்படியானால் அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை பொறுப்பேற்கும். அது பற்றி குழப்பமடையத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
