அஸ்வெசும தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளிகளின் குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ரூ.150,000 வரை வழங்கக்கூடிய இந்த மானியம், வணிக அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவுள்ளது.
2025 முதல் 2027 வரையிலான வேலைத்திட்டமானது 143 பிரதேச செயலகப் பிரிவுகளில் 839 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

உதவித் திட்டத்தின் சலுகைகள்
மேலும், அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தற்போது சலுகைகளைப் பெற்று வரும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1.2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் முன்னோடித் திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam