போலியான தகவல்களுக்கு ஏமாறாமல் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் பணிகள் கடந்த தினம் தடைப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் தடைப்பட்டுள்ளதாக சில தரப்பினர் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, தரகர்கள் (Brokers), இந்த சேவைகள் தடைபட்டுள்ளதாகவும் கூறி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுவோரை தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வருவதாக தற்போது செய்திகள் கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போலியான தகவல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
வேரஹெர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவின் பணிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அனைத்து மாவட்ட அலுவலகங்களின் பணிகளும் தற்போது எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், தரகர்கள் உள்ளிட்டவர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாறாமல் செயற்படுமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
