மிக முக்கிய மேயரின் குடியுரிமையை அதிரடியாக பறித்த ஜெலென்ஸ்கி
ரஷ்யாவிற்கு இரகசிய ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒடேசா மேயரின் குடியுரிமையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரத்து செய்துள்ளார்.
ஒடேசா மேயரிடம் ரஷ்ய கடவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்துள்ள நிலையிலேயே செவ்வாயன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான கருங்கடல் துறைமுக நகரத்தை 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு நபரின் பதவிக்காலத்தையும் ஜெலென்ச்கி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
ரஷ்ய கடவுச்சீட்டு
ஆனால், இந்த விவகாரத்தை தாம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள இருப்பதாக ஒடேசா மேயரான 60 வயது Hennadiy Trukhanov அறிவித்துள்ளார். தம்மிடம் ரஷ்ய கடவுச்சீட்டு இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள அவர், மேயராக தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அடையாளம் காண முடியாமல் உருக்குலைந்த பாலஸ்தீன கைதிகள் உக்ரைன் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நகரத்தை வழி நடத்த ஒரு புதிய இராணுவ நிர்வாகத்திற்குத் தலைமை தாங்க விரைவில் ஒருவரை நியமிப்பதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஒடேசாவில் பல பாதுகாப்பு சிக்கல்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, உள்நாட்டு பாதுகாப்பு முகமையான SBU வெளியிட்டுள்ள அறிக்கையில், Trukhanov செல்லுபடியாகும் ரஷ்ய கடவுச்சிட்டு வைத்திருப்பதாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
